11 ஆசனங்களை பெறுவோம்!! அடைக்கலநாதன் நம்பிக்கை!

0
எதிர்வரும் போதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 11ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல்செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில்போட்டியிடுகின்றோம்.அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணைபோகமாட்டோம்.  தமிழ்மக்களுக்கு தலைமைதாங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலையடையவேண்டாம். இனத்தின் விடுதலையினை நோக்கிச்செல்லும் சின்னமாக சங்குச்சின்னம் இருக்கின்றது.

இதேவேளை பாராளுமன்றத்தேர்தலில் தேசியமக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. எனவே தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்றபோது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.
எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10ஆசனங்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் என்பதுடன் தேசியபட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம்.இதேவேளை “அரசுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை” என்றார்.
Leave A Reply

Your email address will not be published.