டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அவரை கைது செய்தாலும், அவர் தொடர்ந்தும் முதல்வராக நீடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், அவர் அதனை நிராகரித்து வந்தார்.
தன்னை அமலாக்கத்துறை கைது செய்வதைத் தடுக்குமாறு கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
எனினும், இன்று அமலாக்கத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.
Next Post