தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (20) மாலை கனடாவுக்கு புறப்பட்டு சென்றார்.
கனடா வாழ் இலங்கையர்களுடனான சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரன்டோ நகரில் இடம்பெறுமென ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இரண்டாவது சந்திப்பு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரிலும் இடம்பெறவுள்ளது.
குறித்த மக்கள் சந்திப்புகளுக்கு மேலதிகமாக கனடாவில் வாழும் இலங்கை தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது