புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் வித்தியாசம் கிடையாது; சீறும் நாமல்

0

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது வர மேலும் கூறுகையில்,

கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம். தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது.

பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒருவரை நாம் தெரிவு செய்வோம். மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

எனவே கட்சியை கட்டியெழுப்பவுதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளேன். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை. நாம் இந்த நாட்டை வீணடிக்கவில்லை.

பஸ்ஸுக்கு நாம் தீவைக்கவில்லை. அப்பாவி மக்கள் பௌத்த மதகுருமார் மீதும் நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை என்றே தெரிகின்றது என்றார் .

Leave A Reply

Your email address will not be published.