புத்தாண்டு விடுமுறை: வெளிநாடுகளுக்கு சென்ற அமைச்சர்கள்

0

இருபதிற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடபப்ட்டுகிறது.

மேலும் சிலர் வெளிநாடுகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்டவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவருகிறது.

கடந்த 03ஆம் திகதி கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுமார் மூன்று வாரகாலம் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த விடுமுறை காலத்தினை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நுவரெலியா சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.