யாழ்ப்பாணம் , கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகளவில் வந்து போகும் ஆண்கள் மற்றும் பெண்கள்
சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக காவல்துறை புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றையதினம் வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.