ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று இவ் ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க நாட்டிற்கு எலோன் மஸ்க் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமாவார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் ஞாயிற்றுக்கிழமை எலோன் மஸ்க்கைச் சந்தித்துள்ளார்.
இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி எலோன் மஸ்க்கை இலங்கைக்கு அழைத்துள்ளார். எலோன் மஸ்க் வருகை தொடர்பில் திகதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இலங்கை அரசாங்கம் எலோன் மஸ்க் குழுவினருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை உறுதி செய்யும்.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.