இந்தியப் பிரதமராக 3ஆவது முறையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, முதல் வெளியாட்டு பயணமாக இத்தாலிக்குச் சென்றுள்ளார்.
ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலிக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள், ஜி-7 என்ற அமைப்பாக செயற்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.
தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைப்பது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உட்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையேற்று இத்தாலிக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டையொட்டி மோடி உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.