மலேசியாவிலிருந்து இத்தாலி நோக்கி பயணித்த கப்பல்மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த கப்பல் தீப்பிடித்துள்ளதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் யேமனின் ஹுதைதா துறைமுகத்திலிருந்து மேலும் ஒரு ஏவுகணை வீசப்பட்டநிலையில் அது அந்தக் கப்பலுக்கு அருகே விழுந்ததாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி படையினா் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.