யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் (13) தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த துண்டு பிரசுரங்கள் நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்.
அறிவு சார்ந்த அரசியல்
அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பாதி திசையை நோக்கி தள்ளப்பட்டார்கள். ரணில் விக்ரமசிங்க வாக்கின் மீது இருந்த நம்பிக்கையை செயல் இழக்க வைத்தார்.
உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, அரசியல் இருப்புகளை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று.
இம்முறை உணர்வு சார்ந்த அரசியலை தவிர்த்து அறிவு சார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழ் சிங்களமாகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.