சஜித் அணியில் 25 உறுப்பினர்கள் கட்சித்தாவல்

0

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆதரவு வழங்குவதாக தெரிவித்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ள வேண்டும் என மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.

இவ்வாறு, இரண்டாவது தடவையாக பொதுஜன பெரமுன ரணிலிடம் இவ்வாறு அறிவித்துள்ளது.

இணைந்துக் கொள்வதாக உறுதியளித்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரை இணைத்துக் கொள்ள முடியவில்லை எனின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வேறொரு ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதாக கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ரணிலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் பலருடன் அக்கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைக்குமாறு பலத்த அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளுக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து, கட்சி மாற வேண்டாம் என கணவரை வற்புறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக 27ஆம் திகதி வியாழக்கிழமை வெளியான தேசிய நாளிதழான தினக்குரல் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.