சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்தார்.
ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ஓட்டங்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலி அமைந்தார்.
அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்கும் நிகழ்வில் பேசிய விராட் கோலி, இதுதான் இந்தியாவுக்கான தனது கடைசி ரி20 போட்டி எனவும் இதில் வென்றதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை கடைசி ஓவரில் வீழ்த்திய இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.