தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டார்.
மன்னார் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சக்வல ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
செல்வம் அடைக்கலநாதன் புதிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.