வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சட்டத்தரணிகளின் உதவியை நாடியுள்ளார்.
இன்று (16) அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, “மனிதாபிமானம் உள்ள சட்ட நிபுணர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து உதவி செய்யவும், “என் மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன. சட்டம் தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யவும் ” என பதிவிட்டுள்ளார்.
ஐந்து வழக்குகள்
இதேவேளை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.