யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்; சுகாதார அமைச்சின் செயலாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். பி.ஜி. மஹிபால இடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில், ”சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணைகளின் அறிக்கைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் உள்ளிட்டவற்றின் ஆவணத்திரட்டுகளை பெற்றுக்கொள்ள ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.