ஓமன் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ள எண்ணெய் கப்பலில் இருந்த 8 இந்தியர் மற்றும் இலங்கையர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர் .
‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்று பெயரிடப்பட்ட கப்பல், ஓமானின் தொழில்துறை துறைமுகமான டுக்ம் அருகே கடலில் மூழ்கியது. கப்பலில் எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 117 மீட்டர் நீளம் கொண்ட எண்ணெய்க் கப்பல், யேமனின் ஏடன் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இத்தகைய சிறிய எண்ணெய் கப்பல் பொதுவாக குறுகிய கடலோரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஓமான் அதிகாரிகள் கடல்சார் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கினர் .
இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக் இன்று இவர்களை மீட்டுள்ளது.
மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரம் – ஓமனுக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு