கனடாவின் ரொறன்ரோ நகரின் வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அந்த நகரத்தின் முகாமையாளர் போல் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை ரொறன்ரோவில் பெய்த கடும் மழையினால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வீடுகள், அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து கட்டமைப்புகளும் நீரில் மூழ்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் கட்டமைக்கப்படாததால் பெரும் மழை காலங்களில் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்க நேரிடுவதாகவும் நகரத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.