முக்கிய அறிவித்தல் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

0

21/07/2024

இன்று 21/07/2024 ஞாயிற்று கிழமை அன்று Dr Lal Panapitiya (The Deputy Director General of Sri Lanka Health Service) அவர்களிற்கும், ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது, சேவைகளின் தாமதத்தால் தென்மராட்சி மக்கள் அடையும் இன்னல்கள், சுகாதார சேவைகள் மீது தென்மராட்சி மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, இந்த சேவையின் அவசியம் அவசரம் மீளவும் தெளிவுபடுத்தப்பட்டு சத்திரசிகிச்சை நிலையத்தை இயங்க வைக்க பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நீண்ட நெடிய கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் வாக்குறுதிகளை Dr Lal Panapitiya அவர்கள் ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களுக்கு வழங்கியிருந்தார்.

1. சைனாவில் இருந்து பெறப்பட்ட, தற்போது துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளின் அனுமதிக்கு காத்து இருக்கும் Generator 500 KW இன்னும் மூன்று தினங்களில் 24/07/2024 அன்று பொருத்தப்பட்டு சேவைக்கு வரும்.

2. யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு Surgeon, ஒரு Obstetrician, மற்றும் தேவையான தாதிகள் தற்காலிக திட்டத்தில் வழங்கப்பட்டு, சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிரைவில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற ஆவண செய்யப்படும்.

3. இன்னும் ஒரு வாரத்தில் சத்திரசிகிச்சை இயங்குநிலைக்கு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உடனடியாக Dr Lal Panapitiya அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தினார். Dr Lal Panapitiya அவர்கள் கொடுத்த தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட சேவைகள் வெகுவிரைவில் இயக்கு நிலை பெறும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இதுமட்டுமல்லாமல் இந்த முடிவுகளை உத்தியோக பூர்வ அறிக்கையாக செய்தி ஊடகங்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறுமாம் Dr Arumugam Puvinathan அவர்கள் Dr Lal Panapitiya அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றயும் விடுத்தது இருந்தார்.

இதுசம்பந்தமாக இடம்பெறும் மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் தென்மராட்சி மக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

நன்றி,
தென்மராட்சி அபிவிருத்தி கழகம்.

Leave A Reply

Your email address will not be published.