TEA தலைவர் “பனாகொட தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்” காலமானார்.

0

எமது போராட்டத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் போராளி தம்பாப்பிள்ளை
மகேஸ்வரனை 1980 காலப்பகுதியில் ஈழத்தில் அறிந்திராதவர் இலர் என்றே சொல்லமுடியும். முதன் முதலில் யாழ் கோட்டைக்கு எறிகணை தாக்குதல்செய்து அடித்தவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், தேயிலை பொருளாதார இலக்கின் மேல் தாக்குதல், மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு , பனாகொட சிறையுடைப்பு , காத்தான்குடி வங்கிக்கொள்ளை..(மட்டக்களப்பு சிறையுடைப்பு செப்டம்பர் 23. 1983, )என ஒரு கலக்கு கலக்கி போராட்ட இயக்கத்தின்Tamil Elam Army (தமிழீழ இராணுவம்TEA)தலைவராக இருந்தவர் இந்த தம்பிப்பிள்ளை மகேஸ்வரன்ஆவார்.

உலகப்படத்தை எடுத்து எழுமாறாய் ஒரு புள்ளியை தொட்டு இது எந்த இடமெனக் கேட்டால் அந்த நிலப்பரப்பின் வரலாறு, அதில் உள்ள பூகோளவளங்கள், அரசியல் ,இராணுவ, பொருளாதாரம் என விரல் நுனியில் தகவல்வரலாறை வைத்திருந்தவர். பனாகொட சிறை, வெலிக்கடை சிறை, புழல் சிறை, செங்கல்பட்டு சிறை, தன்சானியா சிறையென 20 ஆண்டுகளுக்கு மேலாக தாயகவிடுதலைக்காக சிறைகளில் இருந்து ஊர் திரும்பியவராவார்!

இலங்கையில் பனாகொட என்ற சிங்கள பிரதேசத்தில் அமைந்தமிகப்பெரிய இராணுவதடுப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த இவர்தன்னை தடுப்புமுகாமுக்கு பார்க்கவந்த உறவினர்மூலமாக லெமன்பொப் பிஸ்கற் பைக்கற்றுக்குள் இரும்பறுக்கும் வாளினை கொண்டுவரப்பெற்று தடுப்பு ஜெயில் இரும்புக்கம்பியை கொஞ்சம்கொஞ்சமாக அறுத்து சிறைக்காவலர்கள்கண்ணில் மண்ணைத்தூவ அறுத்தகம்பி வெளித்தெரியாதவாறு சவர்க்காரம் துகள்களால் அதை அடைத்து வெற்றிகண்டு தப்பித்து பல கட்ட தடுப்புக்காப்பரண்களைக்கடந்து பல நாட்கள் காடுகளுக்குள்ளால் உணவு நீரின்றி ஓடி தப்பித்து வந்தவர் இவராவார் . ஒருகாலத்தில் சகோதர இயக்கப்படுகொலைகள் நடந்த காலத்தில் இவரும் குறிவைக்கப்படுகையில் தனியனாக ரைபிளோடு புலியை நேரடியாக குகையிலேயே சந்தித்து இந்தவேலை என்னட்ட வேண்டாம் என்று எச்சரித்ததாகவும்!

தன்னோடு இருந்த நூற்றுக்கணக்கான பலபோராளிகளை போராட்ட இயக்கங்களில் இணையவும் சகோதரப்படுகொலைகண்டு தொடர்ந்து போராடவிரும்பாத போராளிகளுக்கு பணம்கொடுத்து வெளிநாடு சென்று பாதுகாப்பாக வாழ அவர்களுக்குநிதிவழங்கி அனுப்பிவைத்தவர் . என்ற செய்திகளும் அந்தக்காலத்தில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இவர்சார்ந்து உலாவின.. இலங்கைதாயகத்தில் புங்குடுதீவு -12 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்! சிறந்த கல்வியாளர்களும் , வணிகர்களும் நிறைந்த குடும்பமான திரு திருமதி.தம்பிப்பிள்ளை செங்கமலம் தம்பதிகளின் புதல்வன் இவராவார் . இன்றுயாழ்ப்பாணத்தில் காலமாகி விட்டார். இவர் வாழுங்காலத்தில் தன் புகைப்படம் வெளியே கசியாதவாறு பார்த்துக்கொண்டார் என்பது மிகப்பெரிய விடயமாகும் .

பனாகொட முகாமில் இருந்து இவர் தப்பியதும் முதன்முறையாக புங்குடுதீவுமண் இராணுவத்தால் குவிக்கப்பட்டு தேடுதலுக்குள்ளாக்கப்பட்டதும் , அதேநேரம் புங்குடுதீவின் உபதபாலகம் ஒன்றினுள் அவர் தலைமறைவாக தப்பிஒளித்திருந்ததாகவும்
அரச திணைக்களமாக உபதபாலகம் இருந்ததால் இராணுவத்தின்சோதனைக்குட்படுத்தாமல் போனதால் அவர் தப்பித்துக்கொண்டார் என்றும் பிற்காலத்தில் செய்திகள் வந்தன. இந்த உலகின் எங்கோ ஒரு மூலையிலேனும் தமிழனுக்கு என ஒரு தேசம் அமைக்க வேண்டுமென தீராக் கனவுடன் வாழ்ந்த மாவீரனே உன் இழப்பால் ஈழத்தாய் இரத்தக்கண்ணீர் வடிக்கிறாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உன்னதமான போராளியும், ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்த தலைவர்களில் கடைசியாக எஞ்சி இருந்தவருமான தம்பிப்பிள்ளை மகேஸ்வரன்(பனாகொட மகேஸ்வரன்)

19.07.2024 மாலை யாழ்ப்பாணத்தில் இவர் மறைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.