அமெரிக்க, நியூயோர்க்கின் (New York) அப்ஸ்டேட்டில் உள்ள பூங்கா ஒன்றில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேப்பிள்வுட் பூங்காவில், நேற்று (28) இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதோடு ஐந்து பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.