சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோலை 150 ரூபாவிற்கு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்க முடியும் என பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.