‘நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ,” என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கம், உ.பி., பீஹாரைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவிலும் பெண்களுக்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் நடந்துள்ளன.
ஒரு சமூகமாக நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்கத் தூண்டுகிறது? பத்லாபூரில் அப்பாவி குழந்தைகள் இருவர் மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பிறகு, நீதி கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் வரை அவர்களுக்கு நீதி கிடைக்க முதல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து அரசுகளும், குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இதனால் ஒவ்வொரு முறையும் போலீசாரை சார்ந்து இருக்க முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.