வெற்றி நிச்சயம் : கட்சி கொடியேற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர்

0

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என கட்சி கொடியேற்றி தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார்.  

எல்லோருக்கும் வணக்கம். இன்று நம்ம எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் வந்து என்னுடைய அரசியல் பயணத்தை துவங்கி, அதற்கு ஒரு துவக்க புள்ளியாக நமது கட்சி பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றைய தினத்தில் இருந்து பார்த்தால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்காக நீங்க எல்லாரும் காத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது.

நமது முதல் மாநாடு நடத்த, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. என்னைக்கு, எப்போது என்று உங்களுக்கு கூடிய விரைவில் அறிவித்துவிடுவேன்.

அதற்கு முன்னதாக நீங்க எல்லாரும் கொண்டாடி மகிழ்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களாகிய, உங்கள் முன்னாடியும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாடியும், கொடியை அறிமுகப்படுத்தியது மிகவும் பெருமையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.