எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித்பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் என்னும் தலைப்பின் கீழ் 2016 – 2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நிலையான தீர்வை வழங்குவேன் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், “2016இற்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அக்ரஹா காப்புறுதியை விரிவுபடுத்தல்.
ஓய்வூதியம் பெற்ற சமூகத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்த 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தை திருத்துவேன்.