கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த காரை செலுத்திய சாரதி என சந்தேகிக்கப்படும் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 மற்றும் 29 வயதான இரண்டு சந்தேகநபர்களும் பாணந்துறை பின்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கிளப் வசந்த’ கொலை தொடர்பில் பிரதான சந்தேகபர் உள்ளிட்ட மூவர் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்
ஜூலை 8ஆம் திகதி அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ‘கிளப் வசந்த’ உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்டனர்.