ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது.
இதன்படி இலங்கை தொடர்பான விவாதம், செப்டெம்பர் 9 ஆம் திகதி, பேரவையின் 57 வது அமர்வின் ஆரம்ப நாளிலேயே இடம்பெறவுள்ளது.
இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.