முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) ரணில் தரப்பிற்கு செல்ல வாய்ப்பில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பிரதம அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (29.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பயணித்துவருகிறார். அவர் துணிச்சல் மிக்க பெண்.
நானும் பல்வேறு போராட்டங்களில் அவருடன் இணைந்து பயணித்த இருக்கிறேன். எமது போராட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன.
ஆகவே, ஹிருணிகா ரணில் பக்கம் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில், தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பயணிப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.