அநுரவின் அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு?

0

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது அரசாங்கத்தின் கீழ் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

NPP பொருளாதார சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை அவசரமாக நடக்காது என்று வலியுறுத்தினார்.

“அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை நாங்கள் கொண்டு வருவோம். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நாங்கள் உறுதியாக கூற மாட்டோம் என்றாலும், இந்த நாட்டு மக்களுடன் முழுமையான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பிறகு அது உருவாக்கப்படுவதை உறுதி செய்வோம், ”என்று அவர் கூறினார்.

NPP யின் தேர்தல் விஞ்ஞாபனம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, NPP உறுப்பினர்கள் அதன் உள்ளடக்கங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளதாக ஜயதிஸ்ஸ கூறினார்.

“சமூக ஊடகக் கருத்துக்களுக்குப் பதிலாக, எங்கள் எதிரிகளுடன் கணிசமான விவாதத்தை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ஜயதிஸ்ஸ மேலும் விளக்கமளிக்கையில், இந்த விஞ்ஞாபனம் 39 துறைகளில் உள்ள வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது, அவர்கள் ஆவணங்களை இறுதிப்படுத்த முன்னர் விரிவாக ஒத்துழைத்தனர்.

“இது ஒரு அறிவியல் சார்ந்த மற்றும் நடைமுறைக்கேற்ற ஆவணம். எழுபது வருடங்களாக எதுவும் செய்யாதவர்களே இந்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எங்களின் தேர்தல் அறிக்கை இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தால், அது எங்களின் வரவிருக்கும் வெற்றியை மட்டுமே உறுதி செய்கிறது,” என அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.