இராணுவ வீரர்களுக்கு சம்பளத்துடன் விசேட கொடுப்பனவு

0

இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இராணுவத்திடம் இருந்து சலுகை விலையில் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த புதிய முடிவு சுமார் ஐம்பத்தைந்தாயிரம் வீரர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.