கொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் சிறு தொகையினருடைய இரண்டாவது வாக்கை எதிர்க்கட்சி தவைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு டீல் பேசப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் (Umachandra Prakash) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (29) யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தூதரகங்களோடோ அல்லது வேறு நாடுகளோடோ டீல் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.