தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (28) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில், அதிக எண்ணிக்கையானது தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானது என்பதுடன், 1285 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 06 முறைப்பாடுகளும் ஏனைய 56 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.