வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0

கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து இருநூற்று அறுபத்து நான்கு ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசெம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி இந்த எண்ணிக்கை 1,314,122 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசெம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் காணப்பட்டது.

இந்த ஆண்டு (2024) ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,182,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.