பொகவந்தலாவ – கேர்க்கசோல்ட் தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏழு பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தேயிலை செடியின் வேர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவிக் கூடு களைந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மலையக பகுதிகளில் தொடரும் குளவி கொட்டினால் நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது