ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் மன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.