ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேடர்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார வேலைகளின் ஒரு பகுதியாகவே இந்த தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.