புத்தளம் – சேரக்குளி கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் இருந்து நேற்று (06) ஒருதொகை போதை மாத்திரைகள்கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி, கஜபா ஆகிய கடற்படையினர் குறித்த கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, குறித்த காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரண்டு கார்ட்போர்ட் பெட்டிகளிலும் (Pregabalin Capsules) எனும் வகையைச் சேர்ந்த 35,470 போதை மாத்திரைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 35,470 போதை மாத்திரைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.