தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத்தேர்தல் நடைபெறும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியல் சாசனத்தின்படி, தமது கட்சி நாட்டை ஆட்சி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்