சுங்க வரியுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 4200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.