மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
தணமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.