நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார் எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நேற்று (08) நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.