புலமைப்பரிசில் பரீட்சை: விசேட அறிவித்தல் வெளியானது!

0

2024 ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடைவிதித்துள்ளது.

பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.