ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யாவின் தெற்கு பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும் உக்ரைனும் அதன் எல்லைப் பகுதிகளில் ஒரே இரவில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய இராணுவம், பலம் வாய்ந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவில் எரிபொருள் சேமிப்பு தளத்தைத் தாக்கியுள்ளது.
இதன்காரணமாக பல பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும், தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.