அதிபரின் தடியடி மாணவர் வைத்தியசாலையில்: நுவரெலியாவில் சம்பவம்

0

பாடசாலையின் அதிபரினால்  கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு  மாணவர்களை பிரம்பால்  தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு  தோற்றவுள்ள மாணவர்கள் மீது அதிபர் கடுமையாக தாக்கியதால் கடுங்காயங்களுக்கு உள்ளான ஏழு மாணவர்கள் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிபருக்கு எதிராக  மாணவர்களின் பெற்றோர் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு   செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும்  ன் நுவரெலியா வலயக் கல்வி காரியாலயத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து   புதன்கிழமை  (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,

 

மேலும் குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கமாறும் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.