ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு, குறிப்பாக அதன் தூதுவர் ஜூலி சங் ஊடாக அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக, தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறிய காணொளி சில மணி நேரங்களிலேயே, அனைத்து இணைய தளங்களில் இருந்தும் மர்மமான முறையில் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே அமெரிக்கா மற்றும் சங்கின் இலக்கு என வீரவன்ச அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
ரணில் தோல்வியுற்றால், அடுத்த ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.