திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை, ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்ற தனது கேள்விக்குப் பதிலளிக்காத அனுரகுமார திஸாநாயக்க, தன்னை விவாதத்திற்கு அழைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தன்னுடன் விவாதம் செய்வதற்கு முன்னர் அனுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்குக் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குருநாகல் அஸ்லிய கோல்டன் கிரஸெண்டா ஹோட்டலில் நடைபெற்ற குருணாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.