ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் காரணமாக, பொதுஜன பெரமுனவின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற விமான பயணச்சீட்டுக்களை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என்பதை அறிந்ததன் காரணமாகவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.