செயற்கையாக உருவாக்கப்பட்ட ரணிலின் அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
தொழில்முனைவோரான திலித் நேற்றைய தினம் சர்வசன அதிகார கூட்டணியின் பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழிலதிபரும், சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
“அதிக நம்பிக்கையுடன் கூடிய மாற்றத்தை எதிர்பார்த்திருந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.
தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டபடி, எங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்தோம். அதனால்தான் பேரூந்து மேனேஜர்கள் மூலம் மக்கள் வெள்ளத்தினை திரட்டவோ, ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தவோ எமக்கு தேவையிருக்கவில்லை.
அந்தக் கூட்டங்களுக்கு வந்தவர்கள் வாக்களிப்பவர்கள் என்று இன்று யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால், ஒரு குழுவாக நீங்கள் நாடு முழுவதும் கூட்டங்களுக்குச் செல்ல ஒரு சிறிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளீர்கள்