ஹிருணிகாவுக்கு மீண்டும் அழைப்பு?

0

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில் நேரில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஹர்டி ஜமால்டின் தாக்கல் செய்த முறைப்பாடு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதி திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.

அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.