இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கு எண்ணும் நடவடிக்கையில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
(21) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் அதற்கு முன்னரும் பல சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியதாகவும் ஆனால் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் பணி சிறப்பாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய, பொலிஸார் ,ஆயுதப்படை, சிவில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.