இந்தியாவில் ஹரினி உயர்படிப்பு, சந்தேகிக்கிறது தெற்கு: வெடிக்கிறது புதிய சர்சை

0

இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவுடன் பழைய தொடர்புகளைக் கொண்டவர் என்று அறியப்படுகிறது.

கல்வியாளர், அரசியல்வாதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக கடந்த செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம், 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், இலங்கை வரலாற்றில் இத்தகைய பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பிரதம மந்திரி பதவியை தவிர நீதி, கைத்தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல துறைகளும் அமரசூரியவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது 54 வயதாகும் அமரசூரியா, 1991-1994 க்கு இடையில் டில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த தனது கல்வி வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்கும் கல்வி நிறுவனமான இந்துக் கல்லூரியிலேயே அவர் தமது கல்வி கற்றார்.

இது குறித்து டில்லி இந்துக் கல்லூரியின் முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா கருத்துரைத்துள்ளார். இந்து கல்லூரியில் படித்த ஒருவர் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றதை அறிந்து கொள்வதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.